சிமெண்ட் இல்லை, கம்பி இல்லை: மேகாலயப் பழங்குடிகள் உருவாக்கிய வேர்ப் பாலம் - பிரபலப்படுத்திய தமிழர்

இயற்கை தந்த பசுமையான உலகத்துக்கு நடுவே மனிதன் உருவாக்கிய நாகரிக உலகம் முழுவதும் சிமெண்டால் ஆனது. பருவநிலை மாற்றமும், புவி வெப்பம் அடைதலும், உலகின் உயிர்ச் சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், அதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது இந்த சிமெண்ட்.


சிமெண்ட் இல்லாமல் எந்தக் கட்டுமானமும், வளர்ச்சியும் சாத்தியமில்லை என்ற பாதையில் இன்றைய உலகம் நடைபோடுகிறது. ஆனால், பரபரப்பான இந்த நாகரிக உலகத்துடன் தொடர்பில்லாமல் ஒதுங்கி வாழும் மேகாலயாவின் பழங்குடிகள் சிமெண்ட்டும், ஜல்லியும், இரும்பும் இல்லாமல் பாலம் கட்டும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி, அதனை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.


உயிரோடு இருக்கும் மரத்தின் வேர்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய இந்த 'வாழும் பாலங்கள்', நூற்றாண்டுகள் நிலைத்து நின்று அதன் வீரியத்தையும், மாற்று வழியையும் காட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மலையின் அமைதியில் புதைந்து கிடந்த இந்த ரகசியத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து பிரபலப்படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர்.


அப்படி ஒரு வேர்ப்பாலம் அமைந்த மேகா