வரி செலுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதத்தில் தனது இரண்டாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். நாட்டில் பொருளாதார மந்தநிலை நீடித்து வரும் நிலையில், முக்கியமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரி செலுத்துவோருக்கு ஏதுவாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு அரசின் வரி வருவாய் குறைந்துள்ள நிலையில், அரசின் வருவாயைப் பாதிக்காக அளவுக்கு வரிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு உள்ளது.