சென்னை-ஏலகிரி ரயிலின் கழிப்பறையில் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்தவர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. ரயில் ஜோலார்பேட்டையை இரவு 10 மணிக்கு வந்தடைந்தபோது ரயில்வே துப்புரவு தொழிலாலாளர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றனர். அப்போது கழிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார்.